SuperTopAds

பிறக்கும் சகல குழந்தைகளுக்கும் வைத்தியசாலையிலிருந்து வெளியேற முன் செவிப்புலன் பரிசோதனை கட்டாயமாக்கப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
பிறக்கும் சகல குழந்தைகளுக்கும் வைத்தியசாலையிலிருந்து வெளியேற முன் செவிப்புலன் பரிசோதனை கட்டாயமாக்கப்படுகிறது..

இலங்கையில் செவிப்புலன் பிரச்சினை அதிகரித்துள்ள நிலையில், பிறக்கும் ஒவ்வொரு குழுந்தைக்கும் வைத்தியசாலையிலிருந்து வெளியேற முன்னர் செவிப்புலன் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றது. 

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் சந்ரா ஜயசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் செவி புலன் பிரச்சினை அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், காதுகளில் படியும் கழிவுகளை வெளியேற்றுவதற்காக 

காது துடைப்பான், வாகன திறப்பான், சட்டை பின், போன்றவற்றை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.இதனால், செவியினுள் காயங்கள் ஏற்படுவதுடன் நாளடைவில் செவிப்புலன் பிரச்சினை ஏற்படுவதாக வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்துள்ளார்.