காரினால் மோதி கூரிய ஆயுதத்தினால் குத்தி குரூர கொலை..! முறைதவறிய உறவால் நடந்த விபரீதம்..
நாரம்மல பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மீது காரினால் மோதி பின்னர் கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஹமுன பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை கார் ஒன்றில் வந்த நபர் இரு மோட்டார் சைக்கிள்களுடன் மோதச் செய்து, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை
கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,உயிரிழந்த நபர் சந்தேக நபரின் மனைவியுடன் காதல் தொடர்பு கொண்டுள்ளதுடன்,
இது தொடர்பில் சந்தேக நபருக்கு வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருந்துள்ளார். பின்னர் இருவருக்குமிடையில் வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளதுடன்,
இதன்போது ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்குமாறு சவால் விடுத்துள்ளனர். அதற்கமைய, உயிரிழந்த நபரும், இன்னும் சிலரும் இணைந்து சந்தேக நபரை சந்திக்க
மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதன்போது காரில் வந்த சந்தேக நபர் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் மோதச் செய்துள்ளதுடன்,
இதன்போது கீழே விழுந்திருந்த சந்தேக நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.இதன்போது நாரம்மல - கிலின்பொல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே
இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், பஹமுன பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்
நாரம்மல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை குறித்த சம்பவத்தின் பின்னணி முறை தவறிய உறவு என கூறப்படுகின்றது.