பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கான நஷ்டஈடு 25 லட்சமாக அதிகரிப்பு..! விசேட வர்த்தமானி அறிவித்தல்..

ஆசிரியர் - Editor I
பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கான நஷ்டஈடு 25 லட்சமாக அதிகரிப்பு..! விசேட வர்த்தமானி அறிவித்தல்..

தனியார் நிறுவனங்கள் மற்றும் அரை அரசாங்க நிறுவனங்கள் தமது ஊழியர்களை பணி நீக்கம் செய்தால் ஒரு ஊழியருக்கு வழங்கவேண்டிய நஸ்டஈட்டு கொடுப்பனவை 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து இலங்கை தொழில் திணைக்களம் அறிவித்துள்ளதுதாவது. இந்த அறிவிப்பானது பெப்ரவரி 19 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையிலான அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு இலங்கை தொழில் திணைக்களத்தின் 

ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தியால் பெப்ரவரி 25 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையினை மீறினால், உரிய நபர்களுக்கு எதிராக இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் 

சந்திரகீர்த்தி சுட்டிக்காட்டியுள்ளார்.15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சட்டத்தில் இவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு