நாட்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை..! சடுதியாக அதிகரித்த கொள்ளை, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்.

ஆசிரியர் - Editor I
நாட்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை..! சடுதியாக அதிகரித்த கொள்ளை, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்.

இலங்கையில் மோட்டார் சைக்கிள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார். 

கல்னேவ – நேகம பகுதியிலுள்ள சந்தேகத்திற்கிடமான இடமொன்றை சோதனைக்குட்படுத்திய போது, 23 மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக 

பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். அங்கு இவை தவிர 17 உதிரிப்பாகங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் எஞ்சின் ஒன்று 

ஆகியன கண்டெடுக்கப்பட்டுள்ளன.நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், நேற்று (27) மாத்திரம் 6 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாகவும் 

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நாட்டின் வாகன இறக்குமதி தடையை தொடர்ந்து வாகனங்கள் விலை சடுதயாக உயர்ந்துள்ளதுடன், 

வாகன திருட்டு சம்பவங்களும் அதிகரித்துள்ளது. 

Radio