சட்டக்கல்லுாரி மாணவன் மீது காட்டுமிராண்டித்தனம்..! மேலும் 4 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் பணி நீக்கம்..
ஹம்பகா - பேலியகொட பொலிஸ் நிலையத்தில் சட்டக்கல்லுாரி மாணவன் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து மேலும் 4 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்ஸ்பெக்டர் ஒருவர் மற்றும் மூன்று கான்ஸ்டபிள்கள் என ஐவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் உத்தரவுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணியும் சட்டக் கல்லூரியின் இறுதியாண்டு மாணவருமான மிகார குணரத்ன
மீதே பொலிஸ் நிலையத்தில் வைத்த பொலிஸாசாரால் மூர்க்கமான தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.