SuperTopAds

சட்டக்கல்லுாரி மாணவன் மீது காட்டுமிராண்டிதனமான தாக்குதல்..! துரித விசாரணைகள் ஆரம்பம், பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம்..

ஆசிரியர் - Editor I
சட்டக்கல்லுாரி மாணவன் மீது காட்டுமிராண்டிதனமான தாக்குதல்..! துரித விசாரணைகள் ஆரம்பம், பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம்..

சட்டக்கல்லுாரி மாணவன் பொலிஸாரினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளுமாறும், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரியை பணி இடை நிறுத்துமாறும் பொலிஸ்மா அதிபருக்கு பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

சந்தேக நபர் ஒருவரை பேலிய கொட பொலிஸார் அச்சுறுத்துவது குறித்து தான் கேள்வி எழுப்பியவேயை தன்னையும் அவர்கள் அச்சுறுத்தினார்கள் என தெரிவித்துள்ள சட்டத்தரணி சரித்த மைத்திரி குணரட்ண பின்னர் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த 

நபருக்கு உணவு எடுத்துச்சென்ற தனது சகோதரர் மிகமோசமாக தாக்கப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். சட்டத்தரணி சரித்த மைத்திரி குணரட்ண மேலும் தெரிவித்துள்ளதாவது பெப்ரவரி 23 ம் திகதி எனது சிரேஸ்சட்டத்தரணி 

தனது நீண்ட நாள் கட்சிக்காரர் ஒருவரின் சார்பில் ஆஜராவதற்காக  என்னை பேலியகொட பொலிஸ்நிலையத்திற்கு செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார்.பொலிஸ்நிலையத்தில் எனது கட்சிக்காரர் விசேடகுற்றங்களிற்கான பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

என தெரிவித்தனர். நான் அங்கு சென்றதும் சீருடை அணியாத ஒருவர் நான் எனது கட்சிக்காரரை அச்சுறுத்துவதை நான் பார்த்தேன். நான் உடனடியாக அந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் நான் அவர் விசாரணை செய்துகொண்டிருக்கும் நபர் எனது கட்சிக்காரர்

அவரை பிரதிநிதித்துவம் செய்யவே நான் சமூகமளித்துள்ளேன் என தெரிவித்தேன். சட்டத்தரணி என்பதற்கான எனது ஆவணங்களையும் காண்பித்தேன். அவர் எனது ஆவணங்களை உறுதிசெய்யாமல் அங்கிருந்து சென்றார், 

விசாரைணக்கு உட்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த அந்த நபர் பொலிஸார் தன்னை பலமுறை தாக்கியதாகவும், அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்காவிட்டால் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளை சுமத்தப்போவதாகவும் 

வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் நிலையை ஏற்படுத்தப்போவதாகவும் எச்சரித்தனர் என்னிடம் தெரிவித்தார். (அவர் நிதிவிவகாரங்கள் தொடர்பிலேயே விசாரணைகளை எதிர்கொண்டிருந்தார்) நான் தொலைபேசி அழைப்பிற்காக 

வெளியே சென்றுவிட்டு மீண்டும் திரும்பிவந்தவேளை அதே பொலிஸ் உத்தியோகத்தர் சீருடை இல்லாமல் எனது கட்சிக்காரரை மீண்டும் அச்சுறுத்திக்கொண்டிருந்தார். அவரை சுற்றி போதைப்பொருள் குற்றங்களிற்காக சிறைக்கு கொண்டுவரப்பட்டவர்கள் உள்ளனர் 

அவர் மீதும் அந்த குற்றச்சாட்டுகளை சுமத்துவது சுலபம் என அந்த பொலிஸ்உத்தியோகத்தர் எச்சரித்துக்கொண்டிருந்தார். அந்த பொலிஸ் உத்தியோகத்தர் சீருடையில் காணப்படாததால் நான் அவரை சார்ஜன்ட் என அழைத்தேன் அவர் 

சிங்களத்தில் தகாதவார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியவாறு என்னை நெருங்கிவந்தார், லின்டன் சில்வா என்ற தலைமை பொலிஸ்பரிசோதகரும் அவருடன் இணைந்து கொண்டு என்னை மிரட்டினார். நான் யார் என்பதற்கான ஆதாரங்களை உறுதிப்படுத்துமாறு 

அவர்கள் என்னை கேட்டனர். நான் எனது இலங்கை சட்டத்தரணிகள் சங்கள அடையாள அட்டையை காண்பித்தேன் அவர்கள் அதனை குறித்துக்கொண்டனர். அதன் பின்னர் அந்த பொலிஸ்பரிசோதகர் நான் மதுபோதையில் இருப்பதாக குற்றம்சாட்டினார்.

நான் மதுபோதையில் இருக்கின்றேனா என்பதை உறுதிப்படுத்துவதற்காக சோதனையை முன்னெடுக்குமாறு அவர்களை உடனடியாக கேட்டுக்கொண்டேன், நான் அவர்களின் பெயர்களை கேட்டவேளை அவர்கள் அச்சுறுத்தி 

என்னை அங்கிருந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். நான் அங்கிருந்து செல்ல மறுத்தபோதிலும் எனது கட்சிக்காரர் தான் பொலிஸாரின் கடும் சீற்றத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதால் 

என்னை அங்கிருந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார். நான் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் பொலிஸ் தலைமையகத்திற்கும் பேலியகொட பொலிஸாரின் காடைத்தனமான நடவடிக்கைகள் குறித்து தெரிவிப்பதற்காக சென்றேன்.

நான் அங்கிருப்பது தனது பாதுகாப்பிற்கும் உடல்நலத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என எனது கட்சிக்காரர் கருதியதால் நான் எனது சகோதரரை எனது கட்சிக்காரருக்கு உணவை எடுத்துசெல்லுமாறு கேட்டுக்கொண்டேன்.

எனது சகோதரர் மிகாரா குணரட்ன - இலங்கை சட்டக்கல்லூரி மூன்றாம் வருட மாணவர் எனது கட்சிக்காரருக்காக உணவை எடுத்துச் சென்றவேளை பத்து காவல்துறை உத்தியோகத்தர்கள் அவரை காட்டுமிராணடித்தனமாக தாக்கியுள்ளனர்.

அவர்கள் அது நான் என நினைத்தே என்னை தாக்கியுள்ளனர். அவர்தான் மைத்திரி குணரட்ணவின் மகன் என தெரிவித்த பின்னரே தாக்குவதை நிறுத்தியுள்ளனர். தங்களிற்கு பிரச்சினைகள் வரும் என நினைத்ததால் 

அவாகள் எனது சகோதரர் தங்கள் கடமைகளிற்கு இடையூறு விளைவிக்க முயன்றார் என குற்றச்சாட்டினை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை சுமத்தப்போவதாகவும் அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

பொலிஸாரின் அத்துமீறல்களில் இருந்து பொதுமக்களிற்கு பாதுகாப்பு வழங்கும் இறுதி கோட்டையாக நீதித்துறை காணப்படுகின்றது. தங்கள் ஈவிரக்கமற்ற தந்திரோபாயங்கள் குறித்து கேள்வி எழுப்பும் சட்டத்தரணிகளை பொலிஸார் 

அச்சுறுத்துவார்கள் என்றால் பொதுமக்கள் எதனை எதிர்பார்க்க முடியும். என்றார்.