சிரியாவில் உள்ள ஈரான் இராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்!! -ஜோ பைடனின் அதிரடி உத்தரவுக்கு அமைய நடத்தப்பட்டது-
சிரியா நாட்டில் உள்ள ஈரான் இராணுவ தளங்கள் மீது அமெரிக்கா திடீரென வான்வழி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவின்படி, கிழக்கு சிரியாவில் உள்ள ஈரான் இராணுவ தளங்கள் மீது அமெரிக்க விமானப்படை நேற்று ஞாயிற்றுக்கிமை வான் வழி தாக்குதல் நடத்தியதாக அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிகளை பாதுகாப்பதில் ஜோ பைடன் அரசு உறுதியாக உள்ளது. அமெரிக்க விமானப்படை நடத்திய இந்த வான் தாக்குதலில் ஈரானை சேர்ந்த இராணுவ தளங்கள் அழிக்கப்பட்டிருப்பதாக ஜான் கிர்பி கூறியுள்ளார்.