SuperTopAds

52.5 மில்லியன் அமொிக்க டொலர் செலவில் இலங்கை கொள்வனவு செய்த 5 லட்சம் கொவிட் -19 தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தது..

ஆசிரியர் - Editor I
52.5 மில்லியன் அமொிக்க டொலர் செலவில் இலங்கை கொள்வனவு செய்த 5 லட்சம் கொவிட் -19 தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தது..

இலங்கை கொள்வனவு செய்துள்ள 5 லட்சம் கோவ்ஷீல்ட் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு வந்தடைந்திருக்கின்றது. 

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக கட்டுநாயக்க, விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இவை தற்போது விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு மருந்துக் கழகத்திற்கு சொந்தமான சிறப்பு குளிர்பதன வசதிகளுடனான லொறிகள் மூலம் இந்த ஊசி மருந்து 

மத்திய குளிரகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.இந்தியாவின் Serum நிறுவனத்திடமிருந்து 10 மில்லியன் அஸ்ட்ரா-ஜெனெகா தடுப்பூசிகளை வாங்க 

52.5 மில்லியன் அமெரிக்க டொலர் திறைசேரியால் செலவிடப்படுகிறது.