இலங்கைக்கு எதிரான தீர்மானம் வலுவானதாக இருக்கவேண்டும்..! பலாலி விமான நிலையத்தில் அமொிக்க துாதுவரிடம் சுமந்திரன் எம்.பி வலியுறுத்தல்..

ஆசிரியர் - Editor I
இலங்கைக்கு எதிரான தீர்மானம் வலுவானதாக இருக்கவேண்டும்..! பலாலி விமான நிலையத்தில் அமொிக்க துாதுவரிடம் சுமந்திரன் எம்.பி வலியுறுத்தல்..

இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு அமெரிக்கா பின்னால் இருந்து செயல்படும் என அமெரிக்கத் தூதுவர் அலெனா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்களாக தங்கியிருந்த அமெரிக்கத் தூதுவரை கொழும்பிற்கு அழைத்துச் செல்வதற்காக பலாலியில் வந்திறங்கிய விமானத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வந்திறங்கிய நேரம் 

அமெரிக்க தூதுவர் யாழில் இருந்து கொழும்பிற்கு பயணிக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார். இதன்போது அரை மணி நேரம் விமான நிலையத்தில் இருவரும் சந்தித்து உரையாடினர். இதன்போதே அமெரிக்க தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த சந்திப்பின்போது மேலும் பல விடயங்கள் உரையாடப்பட்டதில் தற்போது இம் முறையும் இலங்கை தொடர்பான ஓர் தீர்மானம் வருவது மிகவும் இன்றி அமையாதது. இருப்பினும் அதன் உள் அடக்கம் தொடர்பான சர்ச்சைகளிற்கு அப்பால் 

தீர்மானம் கண்டிப்பாக வர வேண்டும். அதற்கான நடவடிக்கையில் இறங்கி தொடர் நடவடிக்கையாக இடம்பெறலாம் என்பது உட்பட பல விடயங்கள் பேசப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு