SuperTopAds

இதற்கு பின்னரும் நீதியை பின்தொடர்வதற்கான நோக்கம் இலங்கைக்கு இருக்கும் என யார் நம்புவார்கள்..? சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி..

ஆசிரியர் - Editor I
இதற்கு பின்னரும் நீதியை பின்தொடர்வதற்கான நோக்கம் இலங்கைக்கு இருக்கும் என யார் நம்புவார்கள்..? சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி..

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத் தொடரில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் வழங்கிய பதில் குறித்து சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி வெளியிட்டிருக்கின்றது. 

வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சர்வதேச குற்றங்களை மறுப்பதாகவும் பொறுப்புக்கூறலை நிராகரிப்பதாகவும் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை திட்டமிட்ட பிரசாரம் என கூறி நிராகரிப்பதாகவும் கூறியுள்ளார். 

என்பதை கண்காணிப்பகத்தின் ஜெனிவாவிற்கான பணிப்பாளர் ஜோன் பிஷர் சுட்டிக்காட்டினார். அத்துடன் இதைக்கேட்ட பின்னரும் நீதியை பின்தொடர்வதற்கான நோக்கம் இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது என்று எவராலும் நம்ப முடியாது. 

என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே, சர்வதேச பொறுப்புக்கூறல் தற்போது அவசியமாகியுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவாவிற்கான பணிப்பாளர் ஜோன் பிஷர் வலியுறுத்தியுள்ளார்.