காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை பிரான்ஸிஸ் எங்கே? -ஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு

ஆசிரியர் - Admin
காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை பிரான்ஸிஸ் எங்கே? -ஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புனித யாழ். பத்திரிசியார் கல்லூரி ஆய்வு கூடத்தை இன்று திறந்து வைக்க வரும் நிலையில், இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமலாக்கப்பட்டுள்ள கல்லூரியின் முன்னாள் அதிபரான அருட்தந்தை பிரான்சிஸ் யோசெப் குறித்த தகவல்களை அறியத்தருமாறு கோரி பழைய மாணவர்கள் ஒரு பிரவினர் இன்று கவனயீர்ப்பு போராடத்தில் ஈடுபடவுள்ளனர்.

புனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில் நுட்ப மையத்தை இன்று ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக பழைய மாணவர்களின் ஒரு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

கல்லூரிக்குச் சமீபமாக ஜனாதிபதி வரும் வழியில் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது. புனித யாழ். பத்திரிசியார் கல்லூரி அதிபராக கடமையாற்றிய அருட்தந்தை பிரான்சிஸ் அடிகள் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களுடன் இராணுவத்திடம் சரணடைந்தார்.

இவர் இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டதைக் தாம் நேரில் கண்டதாக பலர் சட்சியமளித்துள்ளனர். அதன்பின் அருட்தந்தை பிரான்ஸிஸ் காணாமலாக்கப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே அரும்தந்தை பிரான்ஸிஸ் எங்கே? ஏனக் கேட்டு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுடவுள்ளதாக  பழைய மாணவர்களில் ஒரு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, முற்றுமுழுதாக பழைய மாணவர்களின் நிதியில் அமைக்கப்பட்ட தொழல்நுட்ப மையத்தை திறந்துவைக்க ஜனாதிபதியை அழைத்துள்ளமை குறித்தும் பழைய மாணவர்களின் ஒரு தரப்பினர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.

கல்லூரியின் முன்னாள் அதிபர் சரணடைந்த இறுதி யுத்த காலத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஒருவரை இந்த நிகழ்வுக்கு அழைத்துள்ளமைக்கு அவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு