பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தை கைவிட புகைரத திணைக்கள ஊழியர்கள் தீர்மானம்..!
இன்று நள்ளிரவு தொடக்கம் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தை நடத்தும் தீர்மானத்திலிருந்து புகைரத திணைக்கள ஊழியர்கள் விலகுவதாக அறிவித்துள்ளது.
ரயில் எஞ்சின் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் பணி விலகல் போராட்டத்தில் ஈடுபடதீர்மானித்திருந்தனர்.
வடக்கின் மஹவ மற்றும் ஓமந்தைக்கு இடையிலான ரயில் வழித்தட நிர்மானத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேட்டை முன்னிறுத்தி
இந்த போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தனர். எனினும் தாம் போராட்டத்தை கைவிடுவதாக சற்று முன்னர் அறிவித்துள்ளனர்.