யாழ்ப்பாணத்திலுள்ள தீவுகள் எந்த நாட்டுக்கும் வழங்கப்படாது..! மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டதே இறுதி தீர்மானம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலுள்ள தீவுகள் எந்த நாட்டுக்கும் வழங்கப்படாது..! மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டதே இறுதி தீர்மானம்..

யாழ்ப்பாணத்தில் உள்ள தீவுகளை எந்த நாட்டுக்கும் வழங்கப்போவதில்லை. என மின்சக்தி அமைச்சர் டலஸ் அழக பெரும கூறியிருக்கின்றார். 

நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலை தீவு ஆகிய தீவுகளுக்கு தற்போது டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் அங்கு காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 12 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியுடன் சீனாவின் பங்களிப்புடன் குறித்த திட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையை 

அரசாங்கம் எடுத்திருந்தது. இதேவேளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, வடக்கில் இந்த திட்டத்திற்காக 

12 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை நன்கொடையாக இலங்கைக்கு வழங்குவதாகவும் அரசாங்கத்திடம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் மக்களின் நலன்களை கருத்திற்கொண்டு முடிவு எட்டப்படும் என்றும் 

மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு