யாழ்.புங்குதீவிலிருந்து படகுமூலம் மன்னார் சென்ற இந்திய தூதரக அதிகாரிகள்..! மணல் திட்டுக்கள் குறித்து ஆராய்வது ஏன்..?

ஆசிரியர் - Editor I
யாழ்.புங்குதீவிலிருந்து படகுமூலம் மன்னார் சென்ற இந்திய தூதரக அதிகாரிகள்..! மணல் திட்டுக்கள் குறித்து ஆராய்வது ஏன்..?

யாழ்.புங்குடுதீவு - குறிகட்டுவானில் இருந்து மன்னார் வரை படகில் இந்திய தூதரக அதிகாரிகள், குடும்பஸ்தர்கள் நேற்றைய தினம் கடல்வழிப் பயணம் ஒன்றை மேற்கொண்டனர்.

யாழ்.இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், அவர்தம் குடும்பத்தவர்கள், பிள்ளைகள் என சுமார் 30பேர் நேற்றைய தினம் படகு மூலம் புறப்பட்டு மன்னாரை அடைந்தனர்.

இவ்வாறு மன்னார் வரை கடலில் பயணித்த தூதரக அதிகாரிகள் மீண்டும் கடல்வழியாகவே யாழ்ப்பாணம் திரும்பினர். யாழில் உள்ள தீவுகள் 

சீன நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் தீவுகளும் அதனைச் சூழவுள்ள கடலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இவ்வாறு பயணித்த இந்திய அதிகாரிகள் குழுவினர் மன்னாரிற்கும் இந்தியாவிற்கும் இடைப்பட்ட மணல் திட்டுகள் தொடர்பில் கவனம் செலுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு