இலங்கையின் பாதுகாப்பு படையினர் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமை குறித்து நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன..!
இலங்கையின் பாதுகாப்பு படையினர் பாரிய மனித உரிமை மீறல்களை புரிந்துள்ளார்கள். என நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. அதனை ஒட்டியே அமொிக்காக இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு உதவிகளை வழங்குவதில்லை.
மேற்கண்டவாறு இலங்கைக்கான அமொிக்க துாதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், அமெரிக்க சட்டங்கள் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களங்களத்தின் கொள்கையின் அடிப்படையில்
பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன என நம்பகதன்மை மிக்க தகவல்கள் கிடைத்துள்ள பாதுகாப்பு படைப்பிரிவுகளுக்கு அமெரிக்கா உதவிகளை வழங்குவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் பாதுகாப்பு படையினர்
தற்போதைய எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளக்கூடியவர்களாக மாற்றுவதில் இலங்கைக்கு உதவுவது குறித்து அமெரிக்கா அர்ப்பணிப்புடன் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பிராந்தியத்தினதும்
உலகினதும் பாதுகாப்பிற்கு பங்களிப்பை வழங்ககூடிய நிலையில் அது விளங்குவதை உறுதி செய்யவிரும்புகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது தொடர்ந்தும் மனித உரிமைகள்கள் மதிக்கப்படுவதை வலியுறுத்தும்,
இது எங்கள் பயிற்சி உதவி மற்றும் ஈடுபாடுகள் தொடர்பில் அடிப்படையான விடயம்.இலங்கை இராணுவத்தில் ஏற்படும் மாற்றங்களை நாங்கள் உன்னிப்பாக ஆராய்வோம். படையினர் கொள்கைள் இராணுவ கலாச்சாரம் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களையும்
உன்னிப்பாக ஆராய்வோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனிதஉரிமைகளை நிலைநாட்டுவது நம்பகதன்மை மிக்க பொறுப்புக்கூறல் மற்றும் நீதி நடைமுறைகளிற்கான இராணுவத்தின அர்ப்பணிப்பையும் நாங்கள் உன்னிப்பாக அவதானிப்போம்.
எனவும் அவர் தெரிவித்துள்ளார்.