SuperTopAds

வினோநோகராதலிங்கம் எம்.பியிடமும் விசாரணை!

ஆசிரியர் - Admin
வினோநோகராதலிங்கம் எம்.பியிடமும் விசாரணை!

நீதிமன்ற கட்டளையை மீறி பொத்துவில் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கத்திடம் மாங்குளம் பொலிஸார் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.

முன்னதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அவருக்கு பொலிஸாரால் அழைப்புவிடுக்கப்பட்ட நிலையில், நேரமின்மையால் அங்குவர இயலாது என தெரிவித்திருந்தார், அதற்கமைய வவுனியாவில் உள்ள ரெலோவின மாவட்ட அலுவலகத்துக்கு நேற்றைய தினம் வருகைதந்த பொலிஸார் அவரிடம் விசாரணையை மேற்கொண்டனர்.

இதன்போது தமிழ் மக்களின் உரிமை கோரிய நியாயமான ஜனநாயக போராட்டத்தில் அவர்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் மக்களோடு இணைந்து கலந்து கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் விளக்கமளித்திருந்தார்.

இதேவேளை நீதிமன்றத் தடையுத்தரவுப் பத்திரத்தை தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பெற்றுக்கொள்ளவில்லை என்றும், அது எனக்கு வழங்கப்படவில்லை எனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.