இலங்கையில் தொடர்ந்தும் நில அதிர்வுகள் உணரப்படலாம்..! பேராதனை பல்கலைகழக புவிச்சரிதவியல் பிரிவு எச்சரிக்கை..
இலங்கையிலும் இலங்கையை அண்மித்த பகுதிகளிலும் தொடர்ந்தும் சிறியளவிலான நில அதிர்வுகள் பதிவாகலாம். என பேராதனை பல்கலைகழக புவிச்சரிதவியல் பிரிவு கூறியுள்ளது.
இலங்கைக்கு அருகில் கடல் ஆழத்தில் 4 ரிக்டர் அளவான நில அதிர்வொன்று பதிவாகியிருந்தது. இந்தோ-அவுஸ்ரேலிய புவித்தகட்டில் ஏற்பட்ட பிளவே
இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் எதிர்காலத்திலும் அவ்வாறான சிறிய நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின்
புவிச்சரிதவியல் பிரிவு தெரிவித்துள்ளது.எனினும் அவை நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்துவனவாக அமையாது என்றும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.