SuperTopAds

இ.போ.ச பேருந்தியில் மயங்கி கிடந்த இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணம்..! பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I

இ.போ.ச பேருந்தியில் மயங்கி கிடந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் குறித்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ஹெக்கிராவ - மருதங்கடவல பகுதியை சேர்ந்த 29 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

குறித்த இளைஞன் இ.போ.ச பேருந்தில் மயங்கி கிடந்த நிலையில் காணப்பட்ட நிலையில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

பின்னர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இளைஞனின் சடலம் மீது நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக, 

பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி கூறியுள்ளார்.