இந்தியாவுடனான மோதலில் 5 பேர் உயிரிழப்பு!! -முதன்முறையாக ஒப்புக்கொள்ளும் சீனா-
இந்திய – சீனாவுக்கு இடையில் கல்வன் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு நடந்த மோதலில் தங்கள் நாட்டு வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டதாக சீனா முதன் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.
இரு நாட்டிற்கும் இடையில் இருந்த மோதல் போக்கினை அடுத்து கிழக்கு லடாக் எல்லையில் கடந்த ஆண்டு ஜூன் 15ஆம் திகதி கல்வன் பள்ளத்தாக்கில் இருநாட்டு வீரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
மேற்படி மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இருப்பினும் சீனா தரப்பில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும் சுமார் 45 சீன இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தங்கள் தரப்பில் ஒரு ரெஜிமென்ட் கமாண்டர் மற்றும் 4 வீரர்கள் விவரங்களை குறிப்பிட்டு அவர்களது உயிர்தியாகத்தை சீன இராணுவம் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.