யாழ்.காரைநகரில் மக்களுக்கு சொந்தமான 50 ஏக்கர் காணியை கபளீகரம் செய்ய இன்று அளவீடு..! எதிர்க்க ஒன்றுபடுமாறு சிவில் அமைப்புக்கள் கோரிக்கை..

ஆசிரியர் - Editor I

யாழ்.காரைநகரில் கடற்படையினரின் பயன்பாட்டிற்காக சுமார் 50 ஏக்கர் தனியார் காணகளை சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யும் நடவடிக்கை நாளை இடம்பெறவுள்ள நிலையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு தீவக சிவில் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இது குறித்து மேலும் அவர்கள் கூறுகையில், காரைநகர் - நீலங்காட்டு பகுதியில் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலா விடுதியை மென்மேலும் விஸ்தரிப்பதற்காகவும் கடற்படைமுகாம்களை அமைப்பதற்காகவும் 

இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நில அளவைத் திணைக்களத்தால் அளவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பதியை சேர்ந்த 62 குடும்பங்களுக்கு சொந்தமான 50 ஏக்கர் காணிகளை கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கடற்படையினர் 

ஆக்கிரமித்து வைத்திருக்கும் நிலையில் கடற்படையினருக்கு உத்தியோகபூர்வமாக வழங்கும் நோக்கில் நில அளவை திணைக்களத்தினர் வருகை தரவுள்ளனர் . அத்தோடு எதிர்காலத்தில் இவற்றை சீனாவுக்கு வழங்கும் திட்டமும் காணப்படுவதாக

பல தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகவே பூர்வீக தமிழ் மக்களின் பெறுமதியான இக்காணிகளை பாதுகாக்க இன்றைய தினம் அனைத்து தரப்பினரும் காரைநகரில் ஒன்றுகூடுமாறு தீவக சிவில் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு