“தங்க கூண்டில் இருப்பதைப் போன்றது’’ -வெள்ளை மாளிகை வாழ்க்கை குறித்து ஜோ பைடன்-
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 4 வாரமாக வெள்ளை மாளிகையில் வாழ்வது என்பது தங்க கூண்டில் இருப்பதை போல் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
நான் காலையில் எழுந்ததும் எனது மனைவி ஜில் பைடனை பார்த்து நாம் எங்கே இருக்கிறோம் என்று நகைச்சுவையாக கேட்பேன். மேலும் எனக்கு சேவை செய்வதற்காக காத்திருக்கும் வெள்ளை மாளிகை பணியாளர்களுடன் தான் இன்னும் பழகவில்லை. பெரும்பாலும் எனது வேலைகளை தானே கவனித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.