SuperTopAds

ஒட்டக குட்டியை திருடி காதலிக்கு பரிசளிப்பு!! -காதலன்,காதலி கூண்டோது கைது-

ஆசிரியர் - Editor II

தனது காதலியின் பிறந்த நாளுக்கு பரிசு கொடுப்பதற்காக ஒட்டக குட்டி ஒன்றை  திருடி காதலிக்கு பிறந்த நாள் பரிசாக கொடுத்த காதலனும், காதலியும் கூண்டோடு பொலிஸில் சிக்கினர்.

கடந்த 14 ஆம் திகதி சர்வதேச காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் துபாயில் வசித்து வரும் அமீரக வாலிபர் ஒருவரின் தனது காதலிக்கு காதலர் தினத்தையொட்டி பிறந்த நாள் வந்த காரணத்தினால் அவளுக்கு ஏதாவது ஒரு பரிசளிக்க வழங்க வேண்டும் என அவர் திட்டமிட்டார்.

இதையடுத்து அந்த பகுதியில் ஒட்டகங்கள் இருந்த பண்ணைக்கு சென்று அதன் உரிமையாளருக்கு தெரியாமல் ஒட்டக குட்டி ஒன்றை திருடி வந்து காதலிக்கு பரிசாக கொடுத்துள்ளார். 

இந்த நிலையில் ஒட்டக பண்ணையின் உரிமையாளர் தனது பண்ணையில் ஒட்டகம் ஒன்றின் குட்டியை பிறந்து சில மணி நேரங்களே காணாமல் போனதை அடுத்து இது குறித்து அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

விசாரணையை ஆரும்பித்த பொலிஸார் ஒட்டக குட்டியை பல இடங்களிலும் தேடிவந்தனர். 

இதனை அறிந்து கொண்ட காதலர்கள் அதிர்ச்சியடைந்தனர். பொலிஸாருக்கு பயந்து அந்த வாலிபர் காதலியிடம் இருந்த ஒட்டக குட்டியை வாங்கி அதனை திருடிய பண்ணையின் வாசலின் முன்பு விட்டார். அதன் பின்னர் பொலிஸாக்கு தேலைபேசியில் அழைப்பினை எடுத்து ஒட்டக குட்டி ஒன்று பண்ணையின் வெளியில் நிற்பதாக கூறினார்.

அதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் தகவல் தெரிவித்த வாலிபரிடம் விசாரித்தார். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். 

எனவே சந்தேகம் அடைந்த பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது அவர், தான் ஒட்டக குட்டியை திருடி தனது காதலிக்கு காதலர் தின அன்பளிப்பாகவும், பிறந்த நாள் பரிசாகவும் வழங்கியதை ஒப்புக் கொண்டார். 

இதனையடுத்து பொலிஸார் ஒட்டக குட்டியை திருடிய வாலிபரையும், திருடிய ஒட்டகத்தை பரிசாக பெற்ற காதலியையும் கைது செய்துள்ளனர்.