SuperTopAds

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய 21 வயதான இளம்பெண் திடீர் மரணம்..!

ஆசிரியர் - Editor I

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 21 வயதான இளம் பெண் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்திருக்கின்றார். 

திமாலியந்த பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 4 பிள்ளைகள் இருக்கும் குடும்பத்தில் மூத்த மகளே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ரிதிமாலியந்த கெமுனுபுர ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் குறித்த யுவதி கொரோனா தொற்றுக்குள்ளாகி தியதலாவை தனிமைப்படுத்தல் நிலையத்தில் 

10 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். பின்னர் இரண்டு நாட்களின் குறித்த பெண்ணுக்கு சுவாசிக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. 

உடனடியாக அம்பியுலன்ஸ் உதவியுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

எனினும் அதிகாரிகளின் தாமதம் காரணமாகவே மகள் உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். உயிரிழந்த யுவதியின் சடலம் 

பதுளை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.