SuperTopAds

பேருந்தில் உயிரிழந்து கிடந்த 29 வயதான அரச ஊழியருக்கு கொரோனா தொற்று..! பணியாற்றிய அலுவலகம் முடுக்கம், பலர் தனிமைப்படுத்தலில்..

ஆசிரியர் - Editor I

பேருந்தில் இறந்து கிடந்த 29 வயதான அரச ஊழியருக்கு பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

குறித்த சம்பவம் வடமத்திய மாகாணத்தில் இடம்பெற்றிருக்கின்றது. 29 வயது நபரே இவ்வாறு தொற்றினால் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

குறித்த நபர் நேற்று முன்தினம் பஸ் வண்டி ஒன்றிற்குள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டு அநுராதபுரம் வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டது. 

இதனையடுத்து சடலத்தில் செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே மேற்படி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கின்றது.

குறித்த நபர் வடமத்திய மாகாண அலுவலக உதவியாளராக பணிபுரிந்துவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து அவர் பணிசெய்த அலுவலகத்தில் 25ற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.