SuperTopAds

தடை நீங்கியது முக மறைப்பு தலைகவசம் (full face helmet) அணியலாம்..! பொலிஸார் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள்..

ஆசிரியர் - Editor I

முக மறைப்பு தலைகவசம் (full face helmet) அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம். என சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்பு வழங்கியிருக்கின்றார். 

குறித்த விடயம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தொிவிக்கப்பட்டுள்ளது. முக மறைப்பு தலைகவசம் அணிந்த குற்றச்சாட்டில் பொலிஸார் தன் மீது எடுத்த நடவடிக்கைக்கு எதிராக பாதிக்கப்பட்ட நபர் 2017ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த வழக்கு

இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேற்படி பணிப்பு வழங்கப்பட்ட விடயம் கூறப்பட்டிருக்கின்றது.