SuperTopAds

இராணுவ ஆட்சிக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்!! -மியான்மர் வீதிகளை சூழ்ந்த ஆயுதமேந்திய இராணுவ வாகனங்கள்-

ஆசிரியர் - Editor II
இராணுவ ஆட்சிக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்!! -மியான்மர் வீதிகளை சூழ்ந்த ஆயுதமேந்திய இராணுவ வாகனங்கள்-

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் வலுவடைந்து வரும் நியைலில் போராட்டக்காரர்களை அச்சுறுத்தி அடிக்கி ஒடுக்கும் வகையில் பல நகரங்களில் வீதிகளை ஆயுதமேந்திய இராணுவ கவச வாகனங்கள் சூழ்ந்துள்ளன.

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவித்து அவர்களிடம் நாட்டை ஒப்படைக்குமாறு கோரி இலட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவதுஇ ராணுவத்துக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. எனவே போராட்டத்தை ஒடுக்குவதற்கு இராணுவம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி இராணுவ ஆட்சியை எதிர்ப்பவர்களை ஒடுக்க தயாராகும் விதத்திலும், போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையிலும் அங்கு பல நகரங்களில் ஆயுதமேந்திய இராணுவ வாகனங்கள் வலம் வரத்தொடங்கியுள்ளன.

இருப்பினும் அச்சுறுத்தல்களை தாண்டியும் அந்நாட்டு மக்களின் போராட்டம் தொடர்ந்து வலுவடைந்து செல்கின்றது.