மியான்மரில் வலுக்கும் மக்கள் போராட்டம்!! -நள்ளிரவுடன் இணைய சேவை முற்றாக முடக்கம்-
மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டால், ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், கடந்த சில நாட்களாகவே அங்குள்ள முக்கிய நகரங்களில் மக்கள் வீதிகளில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டக்காரகளை ஒடுக்கும் வகையில் பல நகரங்களில், ஆயுதமேந்திய போர் வாகனங்கள் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் நள்ளிரவுடன் நாடுமுழுவதும் முழுமையாக இணைய சேவை துண்டிக்கப்பட்டு இருக்கிறது.