SuperTopAds

பேராபத்தில் இருக்கிறோம். நாட்டை முடக்குங்கள்..! பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை, நிபுணர்களின் ஆலோசனை எதிர்பார்க்கிறது அரசு..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் 4 பகுதிகளில் புதியவகை திரிபுபட்ட கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், துல்லியமான தொழிநுட்ப மதிப்பீடு நிறைவடையும் வரையில் நாட்டை முடக்கவேண்டும். என இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண சுட்டிக்காட்டியிரக்கின்றார். 

குறித்த விடயம் தொடர்பாக இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், பிரிட்டனில் அடையாளம் காணப்பட்ட திரிபுபட்ட கொரோனா வைரஸ் இலங்கையில் அடையாளம் காணப்பட்டது சாதாரண விடயமல்ல. 

நாடு தற்போது கடுமையான ஆபத்தில் உள்ளது. மேலும் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறினால் நாட்டில் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாகும் பேராபத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். இதேவேளை இன்று மாலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இராணுவ தளபதி நாட்டை முடக்கும் தீர்மானம் எதுவும் இல்லை. என கூறியிருக்கின்றார். 

மேலும் தொற்றுநோயியல் மற்றும் கொவிட்-19 கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி அமல் ஹர்ஷா டி சில்வா இன்று ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போது நாட்டை முடக்கும் தீர்மானம் அவசியமான என்பதை நிபுணர்களின் கருத்தை அறிந்த பின்பே தீர்மானிக்க முடியும். 

அதுவரை புதிய வைரஸ் தொற்று பரவல் குறித்து மிக உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் என்றார்.