SuperTopAds

நாய் பெயரில் 36 கோடி ரூபா சொத்து!! -உயில் எழுதிவைத்து இறந்த பாசக்கார பெண்-

ஆசிரியர் - Editor II

அமெரிக்காவைச் சேர்ந்த பாசக்கார நாய் உரிமையாளர் ஒருவர் தான் பாசமாக வளர்த்த நாய், தான் இல்லாத போது கஸ்;டப்படக் கூடாது என்பதற்காக, 36 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை நாய் பெயரில் எழுதி வைத்துள்ளார்;. 

நாய் உரிமையாளர் கடந்த ஆண்டே இறந்துவிட்டாலும், சொத்து மதிப்பு இன்னும் மதிப்பிடப்பட்டு வருவதால், 36 கோடி ரூபாய்க்கு சொந்தமான நாய் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

அந்நாட்டின் டென்னிசிஸ் பகுதியில் நாஸ்வில்லே பகுதியைச் சேர்ந்தவர் 84 வயதான பில் டோர்ரிஸ் என்பர் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால், தனது தொழிலில் வெற்றிகரமானவராகத் திகழ்ந்தார். சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புக்கு அளவுக்கு சொத்துள்ள அவர் பிள்ளைகளாக எவரையும்  தத்தெடுத்து வளர்க்கவில்லை. 

இதனால் லுலு எனும் பார்டர் கோலி இன நாய் ஒன்றை மட்டுமே அவர் வளர்த்து வந்துள்ளாடிர். ஒரு நிமிடம் கூட லுலுவை விட்டு அவர் பிரிந்திருக்கமாட்டார். அந்த அளவுக்கு லுலுவை அவர் நேசித்தார்.

84 வயதான, முதுமையால் வாடிய பில் டோர்ரிஸ், தனது இறுதிக்கால, நெருங்கியதை உணர்ந்ததும் தான் நேசித்த லுலு, தன் காலத்துக்கு பின் துன்பப் படக்கூடாது என்பதற்காக 5 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் அனைத்தையும் லுலு மீது உயில் எழுதிவைத்தார். 

தான் எழுதிவைத்த உயிலில், “இந்த உயில் லுலுவின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கானது. எனது சொத்து அனைத்தையும் லுலு பெயருக்கே எழுதிவைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.