ஆழுங்கட்சி - எதிர்கட்சி இடையிலான கடும் தர்க்கத்தின் மத்தியில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த ஜனாதிபதி..!
நாடாளுமன்றில் இன்றைய தினம் கடும் வாக்குவாதத்தின் மத்தியில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ நாடாளுமன்றத்திற்குள் நுழைந்திருக்கின்றார்.
ஆழும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கடும் வாக்குவாதம் இடம்பெற்றிருந்த நிலையிலேயே திடீரென
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிய நிலையில்,
சபை நடவடிக்கைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையான 4 நாட்களுக்கு இடம்பெறவுள்ளன. இந்நிலையில் இன்றைய தினம் சபை அமர்வுகள் காலை 10 மணிக்கு ஆரம்பமாகின.
இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இன்றைய சபை அமர்வுகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துகொண்டார்.
ஜனாதிபதி நாடாளுமன்றிற்குள் பிரவேசித்த வேளை, கொழும்பு துறைமுகத்தில் உள்ள கிழக்கு முனையம் தொடர்பாக சபையில்
ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறப்பிடத்தக்கது.