போதைப் பொருள் பாவனையில் பாடசாலை மாணவர்கள்..! விசேட நடவடிக்கை ஆரம்பமானது..

ஆசிரியர் - Editor I

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கல்வியமைச்சு ஆகியன இணைந்து விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றது. 

மேற்படி விடயம் தொடர்பாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியிருக்கின்றார். இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகுவதை 

தடுப்பதற்கான திட்டங்களை தயாரிப்பது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. நாட்டில் தற்போது 90 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் பேர்வரை 

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர். இவர்களின் தொகை படிப்படியாக அதிகரித்துச் செல்வதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இந்த நிலைமைக்கு பிரதான காரணம் இளம் வயதினர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருகின்றமையே 

இந்நிலையில் இளம் வயதினரை போதைப்பொருள் பாவனையிலிருந்து மீட்பதென்றால், பாடசாலை மட்டத்திலிருந்தே அவர்களுக்கு போதைப்பொருள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று கலந்துரையாடப்பட்டது. 

அதற்கமைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும், கல்வி அமைச்சும் இணைந்து பாடசாலை மட்டத்தில் ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த முடிவெடுத்துள்ளது. இதன்போது இந்த செயற்பாடுகளுக்கு சாரணியர் அமைப்பினரும், 

இலங்கை செஞ்சிலுவை அமைப்பினரும் மற்றும் தேசிய மாணவர் படையணியும் ஒத்துழைப்பு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அத்மிரால் சரத் வீரசேகர தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், 

அமைச்சின் செயலாளர் ஓய்வுப்பெற்ற மேஜர் ஜெனரால் ஜகத் அல்விஸ், லிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன, கல்வி அமைச்சின் உறுப்பினர்கள், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினர், சாரணியர் அமைப்பினர் 

மற்றும் தேசிய மாணவர் படையணியினரும் இணைந்துக் கொண்டிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு