SuperTopAds

இம்ரான் பாண்டியன் படையணி போராளிக்கு வழங்கப்பட்ட திறமைச் சான்றிதழ் முள்ளிவாய்க்காலில் மீட்பு!

ஆசிரியர் - Admin
இம்ரான் பாண்டியன் படையணி போராளிக்கு வழங்கப்பட்ட திறமைச் சான்றிதழ் முள்ளிவாய்க்காலில் மீட்பு!

போராளிகளின் சிறப்பு செயற்பாட்டுக்காக வழங்கப்பட்ட நற்சான்றிதழ் ஒன்றை சர்வதேசப் பிரதிநிதிகள் முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று மீட்டனர். 

இறுதிப் போர் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேசப் பிரதிநிதிகள் அந்தப் பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றுக்குள் இருந்து குறித்த சான்றிதழை மீட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் இம்ரான் பாண்டியன் சிறப்பு படையணியை சேர்ந்த செ.றமணன் என்னும் போராளி, வவுனியா குஞ்சுக்குளம் பகுதியில் இராணுவத்தினரின் வலிந்த தாக்குதலின் போது பாதகமான சூழலைக் கருத்திற் கொள்ளாமல் தொடர்ந்து சமர்க்களத்தை எதிர் கொண்டுள்ளார். 

அதற்காக விடுதலைப் புலிகளின் சமராய்வு மையத்தின் ஊடாக தலைவர் பிரபாகரன் பாராட்டு தெரிவித்துள்ளதாக அந்தச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.