இத்தாலியின் எட்னா எரிமலை வெடித்தது!! -அயலில் உள்ள மக்கள் அவசர வெளியேற்றம்-
இத்தாலி நாட்டில் உள்ள ஐரோப்பிய கண்டத்தின் மூன்று பெரிய எரிமலைகளில் ஒன்றான எட்னா எரிமலை வெடித்து நெருப்பு குழம்பை வெளியிட்டு வருகிறது.
இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி நகரில் அமைந்துள்ளது எட்னா எரிமலை புகழ்பெற்ற சுற்றுலா தளமாகவும் விளங்கி வருகிறது. இந்த நிலையில் அந்த எரிமலை கடந்த மாத இறுதியில் வெடிக்க ஆரம்பித்தது.
தற்போது இந்த எரிமலையின் முகப்பு பகுதியில் இருந்து ‘லாவா’ எனப்படும் நெருப்புக் குழம்பையும், சாம்பலையும் வெளியிட்டு வருகிறது. இதன் சுற்றுப்புறத்தில் உள்ள ஊர் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விட்டனர்.