SuperTopAds

அமசோன் தலைமை அதிகாரி பதவியில் இருந்து விலகும் ஜெப் பெசோஸ்!!

ஆசிரியர் - Editor II

உலகின் முன்னணி நிறுவனங்களின் ஒன்றாக உள்ள அமசோன் நிறுவனத்தின் தலைமை பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜெப் பெசோ அறிவித்துள்ளார்.

அவர் கடந்த 2017 அக்டோபர் மாதத்தில் இருந்து உலக பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றார். 

இருப்பினும் கடந்த மாதம் டெஸ்லா இன்க் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவரான எலன் மாஸ்க் உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார். 

இந்நிலையில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தலைமை நிறைவேற்று அதிகாரி பதவியில் இருந்து விலகி, நிர்வாக தலைவராகவும், அறக்கட்டளை பணிகளிலும் ஈடுபட உள்ளதாக ஜெப் பெசோஸ் அறிவித்துள்ளார்.

அவரது இடத்திற்கு அமசோன் இணையத் தள பொறுப்புகளை நிர்வகித்து வரும் ஆன்டி ஜாஸ்ஸி நியமிக்கப்பட்டுள்ளார்.