40 லட்சம் கொரோனா தடுப்பூசி இலங்கை வருகிறது..! கொவெக்ஸ் சலுகையின் கீழ்..

ஆசிரியர் - Editor I

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் சுமார் 40 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. கொவெக்ஸ் சலுகையின் கீழ் இந்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

இதன் படி AstraZeneca Covishield தடுப்பு மருந்துகள் இலவசமாக கிடைக்கவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபன பணிப்பாளர் நாயகத்தின் தென்கிழக்காசிய வலயத்திற்கான பிரதிநிதி, விசேட வைத்திய நிபுணர் பாலித்த அபேகோன் தெரிவித்துள்ளார்.

முதல் தொகுதி தடுப்பூசிகள் இம்மாத இறுதிக்குள் கிடைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முதல் கட்டத்தில் 30 வீத தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளன.

எஞ்சிய கொரோனா தடுப்பூசிகள், பல்வேறு கட்டங்களின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நாட்டிற்கு இலவசமாக வழங்கப்படவுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் பாலித்த அபேகோன் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு