SuperTopAds

இலங்கையில் கொரோனா தொற்றினால் முதல் வைத்தியர் உயிரிழப்பு..! பெறுமதிவாய்ந்த பல மருத்துவர்கள் முயற்சித்தும் காப்பாற்ற முடியவில்லை..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா தொற்றினால் 1வது வைத்தியர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்திருக்கின்றார்.

கொரோனா தொற்றுக்குள்ளான கஜன் தந்தநாராயண(வயது31) கராப்பிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்பை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்திரக்கின்றார். 

கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளா நிலையில் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

அருக்கு நிமோனியா மற்றும் நீரிழிவு நோய் இருந்தமையால் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இலங்கையின் பெறுமதிவாய்ந்த பல வைத்திய நிபுணர்கள் இணைந்து 

அவரை காப்பாற்றுவதற்காக போராடியபோதும் இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை அவருடைய குடும்பத்தில் பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கின்றனர்.