SuperTopAds

மியான்மரில் ஒருவருடத்திற்கு அவசர நிலை பிரகடனம்!! -இராணுவம் அதிரடி அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II

மியான்மர் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் அந்நாட்டு இராணுவத்துக்கும் இடையே கடந்த சில வாரங்களாகவே மோதல்  நடந்து வருகின்றது.

இந்த சூழலில், மியான்மர் அரசு ஆலோசர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி உள்ளிட்டோரை இராணுவம் சிறைபிடித்தது. இதனால், அந்நாட்டில் மீண்டும் இராணுவ புரட்சி ஏற்படுமோ என்ற பரபரப்பு நிலவியது. 

இந்த நிலையில், அந்நாட்டில் ஒருவருடத்திற்கு அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது. அங்கு இன்று பாராளுமன்றம் கூட இருந்த நிலையில், இராணுவத்தின் இந்த நடவடிக்கையால் அந்நாட்டில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மியான்மரில் நடைபெற்ற 2 ஆவது பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி கட்சி அமோக வெற்றி பெற்றது. இருப்பினும் இராணுவம் இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகவும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.