SuperTopAds

மிக விரைவில் மக்களை சந்திப்பேன்!! -வைத்தியசாலையில் இருந்து சசிகலா அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
மிக விரைவில் மக்களை சந்திப்பேன்!! -வைத்தியசாலையில் இருந்து சசிகலா அறிவிப்பு-

சொத்து குவிப்பு வழக்கில் தற்போது விடுதலையான சசிகலா மிக விரைவில் மக்களை சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார். 

சொத்து குவிப்பு வழக்கில் 4 வருடமாக சிறையில் இருந்த சசிகலா நேற்று விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் கடந்த 20 ஆம் திகதி முதல் அவர் கொரோனா தொற்று மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் பெங்களூர் விக்டோரியா அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் சிறை அதிகாரிகள் வைத்தியசாலையில் வைத்தே சசிகலாவிடம் கையெழுத்து பெற்று அவரை விடுதலை செய்ததாக அறிவித்தனர்.

எதிர்வரும் 30 ஆம் திகதி சசிகலாவுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அதில் பாதிப்பு இல்லை என்றால் அன்றே அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறுவார். 

வைத்தியசாலையில் இருந்து வெளியேறி அவர் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தான் தமிழகத்திற்கு வர திட்டமிட்டுள்ளார். பிப்ரவரி 3 ஆம் திகதி அவர் சென்னை திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை தொடர்ந்து மக்களை சந்திக்கப் போவதாக சகிகல தெரிவித்துள்ளார்.