SuperTopAds

வானில் விமானத்தின் முன் திடீரென வந்த பறக்கும் தட்டு!! -சூரியனை விட அதிகமான பிரகாசத்துடன் வந்ததால் அதிர்ச்சியடைந்த விமானி-

ஆசிரியர் - Editor II

பாகிஸ்தானில் கராச்சி நகரில் இருந்து லாகூர் நோக்கி பறந்து கொண்டிருந்த ஏர்பஸ் ஏ-320 விமானம் ரகீம் யார் கான் என்ற பகுதியருகே வந்தபொழுது, வானில் திடீரென அடையாளம் காணமுடியாத பறக்கும் தட்டு ஒன்று தென்பட்டுள்ளது.

இதை பார்த்த விமானி அதிர்ந்துள்ளார்.  பின்னர் அதனை வீடியோவாக எடுத்துள்ளார்.  இதுபற்றி விமான கட்டுப்பாட்டு அறைக்கும் அவர் தகவல் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி விமானி கூறும்பொழுது, சூரியஒளியை விட மிக பிரகாசமுடன் அந்த பறக்கும் தட்டு காணப்பட்டது.  பகற்பொழுதில், விமான பயணத்தில் இதுபோன்ற அதிக பிரகாசம் கொண்ட பொருள் ஒன்றை காண்பது மிக அரிது.

வானில் தென்பட்ட அந்த பொருள் கிரகம் இல்லை.  ஆனால், பூமிக்கு அருகே காணப்படும் விண்வெளி நிலையம் அல்லது ஒரு செயற்கை கிரகம் ஆக கூட அது இருக்கலாம் என கூறியுள்ளார்.