SuperTopAds

மத்திய வகுப்பு காணிகளில் வாழும் மக்களுக்கு எப்போது விடுதலை?

ஆசிரியர் - Editor I
மத்திய வகுப்பு காணிகளில் வாழும் மக்களுக்கு எப்போது விடுதலை?

முல்லைத்தீவு மாவட்டத்தில் மத்திய வகுப்பு காணிகளில் மிக நீண்டகாலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் சொந்த காணியும் இல்லாமல், நிரந்தர வீடுகளும் இல்லாமல் அல்லல்படும் நிலையில் அவர்களு க்கு காணிகள் மற்றும் வீடு பெற்றுக் கொடுக்கப்படவேண்டும். வடமாகாணத்திற்கு ஒரு லட்சம் வீடுகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதில் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கும் வழங்கப்படவேண்டும்.

மேற்கண்டவாறு வடமாகாணசபை உறுப்பினர் து.விகரன் கூறியுள்ளார். மேற்படி விடயம் தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு அவர் தகவல் தருகையில், மத்தியவகுப்பு காணி என்னும் போர்வையில் முன்னதாக உறுதி பெற்றவர்கள் வேறு இடங்களில் வசிப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால் அந்தக்காணிகளில் 27 தொடக்கம் 30வருட காலமாக வாழ்கின்ற மக்கள் அப்படியே இருப்பதா? அந்த மக்களுக்குரிய மாற்றுத்தி

ட்டங்கள் என்ன? இப்படியான மத்திய வகுப்புக் காணிப்பிரச்சினைகள் சில கரைதுறைப்பற்றிலே தீர்கப்பட்டிருக்கின்றது. புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் வெள்ளப்பள்ளம் பகுதியிலும் சில பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்பட்டிருக்கின்றது. இருப்பினும் இன்றுவரை இந்த பிரச்சினைக்கு முழுமையாக தீர்வுகள் எட்டப்படவில்லை. அத்துடன் தற்போது அந்த மக்கள் மீள்குடியேறி ஒன்பது வருடங்களாகின்றது. அதற்

கு முன்பு 20வருட காலத்திற்கும் மேலாக, அந்த காணிகளில் வசித்துள்ளார்கள். மீள்குடியேறி கடந்த ஒன் பது வருடங்களிலாவது இந்த பிரச்சினைகளை தீர்க்கும் பணிகளை உரியவர்கள் மேற்கொண் டிருந்தால், இன்று அவர்களுக்கு காணி கிடைத்திருக்கும். ஆனால் ஏன் இன்னும் இதற்கு நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருக்கிறீர்களா? என கேட்க வேண்டியதாக உள்ளது. அந்த மக்களுக்கு காணிகள்

வழங்கப்படவேண்டும். அதேபோல் வீடுகளும் வழங்கப்படவேண்டும். எதிர்காலத்தில் ஒரு லட்சம் வீடு கள் வடமாகாணத்திற்கு வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகின்றது. அந்த வீடுகளில் இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வழங்கப்படவேண்டும். இந்த விடயத்தை கடந்த 12ம் திகதி நடைபெற்ற பிர தேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களிலும் சுட்டிக்காட்டியுள்ளேன் என்றார்.