27 மனைவிகள், 150 குழந்தைகள்!! -ஒரே குடும்பமாக வசிக்கும் விநோதம்-
கனடாவை சேர்ந்த 64 வயதான வின்ஸ்டன் பிளாக்மோர் என்பவர் தனது 27 மனைவிகள் மற்றும் 150 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் வசித்து வரும் பிளாக்மோரின் மகன் மெர்லின், டிக்டாக்கில் தனது குடும்பத்தினரின் புகைப்படத்தை இணைத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தோம். ஆனால் சமீபகாலமாக தான் வேலை நிமித்தமாக அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருவதாக கூறியுள்ளார்.