SuperTopAds

டிரம்ப்பின் கொள்கைகளை தலைகீழாக மாற்றிய பைடன்!! -முதல் நாளிலேயே 15 அதிரடி உத்தரவுகளுக்கு கையெப்பம்-

ஆசிரியர் - Editor II
டிரம்ப்பின் கொள்கைகளை தலைகீழாக மாற்றிய பைடன்!! -முதல் நாளிலேயே 15 அதிரடி உத்தரவுகளுக்கு கையெப்பம்-

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன், பதவியேற்ற முதல் நாளிலேயே டிரம்பின் சில கொள்கை முடிவுகளை மாற்றியமைத்துள்ளார்.

குறிப்பா கொரோனா நெருக்கடி, குடியேற்றம், இனவாத பிரச்சனை உள்ளிட்ட 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார் பைடன்.  

கொரோனா நோய்த்தடுப்பு விடயத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை அதிகரிப்பது தொடர்பான உத்தரவில் முதலில் கையெழுத்திட்டார். அதன்பின் அமெரிக்க - மெக்சிகோ எல்லைச் சுவர் கட்டுமானம் நிறுத்தம், அமெரிக்கா -கனடா இடையிலான எரிவாயு இணைப்பு திட்டமான, கீஸ்டோன் எக்ஸ்.எல். பைப்லைன் திட்டம் ரத்து உள்ளிட்ட உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

மேலுமு; பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது தொடர்ப்ன டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவை மாற்றி, பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்திருந்தார். அதன்படி, பதவியேற்ற முதல் நாளிலேயே இவை அனைத்திற்குமான உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.