பொதுசுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பியவருக்கு 6 வருடங்கள் சிறை..! 10 ஆயிரம் ரூபாய் தண்டம்..

ஆசிரியர் - Editor I

பொது சுகாதார பரிசோதகரின் முகத்தில் துப்பிய கொரோனா நோயாளிக்கு 6 வருடங்கள் சிறை தண்டணையும் 10 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண கூறியுள்ளார். 

3 குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட நிலையில் பாணந்துர நீதிவான் நீதிமன்றம் குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டணையும் 10 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்து உத்தரவிட்டுள்ளது. அலுத்கம பகுதியை சேர்ந்த குறித்த நபர் 

கடந்த வருடம் டிசம்பர் 2ம் திகதி பொதுசுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பியிருந்தார். இதறையடுத்து டிசம்பர் 4ம் திகதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு செல்ல மறுத்தே அவர் அவ்வாறு நடந்து கொண்டுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு