SuperTopAds

யாழ்.நெடுந்தீவு கடலில் கடற்படை படகுடன் மோதி கடலில் மூழ்கிய இந்திய இழுவை படகில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரும் உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I

யாழ்.நெடுந்தீவு கடற்பகுதிக்குள் நுழைந்து மீன் பிடித்ததுடன் இலங்கை கடற்படை படகுடன் மோதி விபத்துக்குள்ளானதில் கடலில் மூழ்கிய 4 மீனவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரும் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட இரு சடலங்களில் ஒன்று யாழ்ப்பாணத்தை சேர்ந்தவருடையது எனவும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. 

இலங்கை கடல் எல்லைப் பரப்பில் திங்கட் கிழமை இரவு மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான ஓர் ட்ரோலர் படகினையும் அதில் பயணித்த நான்கு மீனவர்களையும் காணவில்லை என இந்திய மீனவர்கள் தெரிவித்திருந்தனர். இவ்வாறு காணாமல்போன படகு இலங்கை கடற்படையினரின் கப்பலில் மோதியிருக்கலாம் என்ற சந்தேகமும் 

 காணாமல்போன இந்திய மீனவர் படகில் இருந்த மீனவர்கள் நால்வரிற்கும் என்ன நடந்தது என்ற அச்சம் நிலவிய சமயம் நேற்று மாலை இலங்கை கடற்படையினரால் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டன.இவ்வாறு மீட்கப்பட்ட இரு சடலங்களும் செல்வம் - செந்தில்குமார் வயது 35 மற்றும் சாம்சன் டர்வின் வயது , 28 ஆகியோரது சடலமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. 

இதேநேரம் குறித்த படகில் பயணித்த நான்கு மீனவர்களில் ஒருவரான சாம்சன் டர்வின் வயது 28 என்பவர் இலங்கையில் இடம்பெற்ற போரின் காரணமாக 2009ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து தமிழ் நாட்டில் மண்டபம் முகாமில் தங்கியுள்ள நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக கூலித் தொழிலிற்காக மீன்பிடியில் ஈடுபட்டவர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. 

மீட்கப்பட்ட இரு சடலங்களும் பி.சி.ஆர் பரிசோதனைக்காகவும் அதன் பின்னரான பிரேத பரிசோதனைக்காகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட அதேநேரம் காங்கேசன்துறை பொலிசார் ஊடாக நீதவானின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. நீதிமன்றின் உத்தரவிற்கமை அடுத்த கட்ட பணிகள் இடம்பெறும்.