இறுதி பயணத்தில் டிரம்ப்!! -பண்ணைவீட்டில் குடும்பத்துடன் குடியேறினார்-

ஆசிரியர் - Editor II
இறுதி பயணத்தில் டிரம்ப்!! -பண்ணைவீட்டில் குடும்பத்துடன் குடியேறினார்-

ஜனாதிபதியாக ஜோ பைடன், துணை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கமலா ஹாரிஸ் இன்று பதவியேற்க உள்ளனர்.

இந்நிலையில் இன்றுடன் டொனால்டு டிரம்பின் பதவிகாலம் முடிவடைகிறது.

பதவிகாலம் முடிவடைய உள்ள நிலையில், டொனால்டு டிரம்ப் இன்று புதன்கிழமை வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறினார். அவர் வெள்ளைமாளிகையில் இருந்து வெளியேறி மெரிலேண்ட் பகுதியில் உள்ள இராணுவ தளத்தில் நடைபெற்ற பிரிவு உபசார நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின்னர் டொனால்டு டிரம்ப் புளோரிடாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

புளோரிடாவில் உள்ள  என்ற தனது பிரம்மாண்டமான பண்ணைவீட்டில் குடும்பத்தினருடன் டிரம்ப் குடியேற உள்ளார். புளோரிடா கடற்கரையோரம் அமைந்துள்ள அந்த பிரம்மாண்ட பண்ணைவீட்டில் தங்க உள்ள டொனால்டு டிரம்ப் தன்னுடன் வெள்ளைமாளிகையில் பணிபுரிந்த சிலரையும் பண்ணைவீட்டில் பணிக்கு அழைத்து செல்ல உள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு