பாராளுமன்றம் வந்தார் ஜோ பைடன்!! -வந்தவுடன் அமெரிக்காவில் இது ஒரு புதிய நாள் இது என்று டுவிட்-
அமெரிக்காவில் இது ஒரு புதிய நாள் என அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்னும் சில மணி நேரங்களில் பதவியேற்க்கவுள்ளார்.
அமெரிக்க பாராளுமன்றத்தில் இலங்கை நேரப்படி இரவு 10 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஜோ பைடன் தற்போது பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பாராளுமன்றத்திற்கு வந்துள்ளார்.
இந்நிலையில், ஜோ பைடன் தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள பதிவில், ‘அமெரிக்காவில் இது ஒரு புதிய நாள்’ என தெரிவித்துள்ளார்.