வானூர்தியில் இருந்து விழுந்த தங்க மழை!!
ரஷ்யாவிலிருந்து புறப்பட்ட வானூர்தியில் இருந்து தங்கம் மற்றும் வைர குவியல்கள் வானூர்தி ஓடுதளத்தில் மழையாகப் பொழிந்த சம்பவம் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் யாகுதியா பகுதியில் இருந்து நிம்பஸ் வானூர்தி சேவை நிறுவனத்தின் சரக்கு வானூர்தி ஒன்று புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சில நொடிகளில் வானூர்தியில் இருந்து தங்கக் கட்டிகள் மற்றும் பிளாட்டினம் உள்ளிட்டவை குவியல் குவியலாக மழை போன்று பொழிந்துள்ளது.
அது ஓடுதளம் முழுக்க சிதறியபடி விழுந்துள்ளது. குறித்த தகவல் விமானிக்கு
தெரியப்படுத்தப்பட்டதும் வானூர்தியை அருகாமையில் உள்ள வானூர்தி நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது .
குறித்த சரக்கு வானூர்தியானது சுமார் 265 மில்லியன் பவுண்ட்ஸ்
மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் கட்டிகளை எடுத்துச் சென்றுள்ளது.
இந்த நிலையில் வானூர்தியில் இருந்து விலைமதிப்பற்ற பொருள்கள் தொலைந்துள்ளதை அடுத்து குறித்த வானூர்தி நிலையத்தை அதிகாரிகள் மூடியுள்ளனர்.