பதவி ஏற்க வாடகை விமானத்தில் வந்த ஜோ பைடன்!! -அரச விமானம் ஒதுக்காத டிரம்ப்-

ஆசிரியர் - Editor II
பதவி ஏற்க வாடகை விமானத்தில் வந்த ஜோ பைடன்!! -அரச விமானம் ஒதுக்காத டிரம்ப்-

அமெரிக்க ஜனாதிபதியாக இன்று புதன்கிழமை பதவியேற்க உள்ள ஜோ பைடனுக்கு பதவியேற்பிற்கு வருகைதருவதற்கு டொனால்டு டிரம்ப் விமானம் ஒதுக்காததால் வாடகை விமானத்தில் வந்திறங்கினார் ஜோ பைடன்.

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று புதன்கிழமை பதவி ஏற்கிறார். அவருடன் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.

இன்று பதவியேற்புக்காக ஜோ பைடன் வாசிங்டன் டி.சிக்கு வரவேண்டும். ஆனால், அவருக்கு டிரம்ப் அரசாங்க விமானத்தை ஒதுக்கவில்லை

ஆகவே, வேறு வழியில்லாமல், வாடகைக்கு தனியாக ஒரு விமானத்தை அமர்த்திக்கொண்டு பயணம் செய்துள்ளார் ஜோ பைடன். அத்துடன், ஜோ வாசிங்டனில் கால் பதித்த நேரம், வெள்ளை மாளிகை டிரம்பின் பிரிவு உபச்சார வீடியோவை வெளியிட்டுள்ளது. 

அதில், மரியாதைக்குக்கூட ஜோ பைடனின் பெயரை உச்சரிக்கவோ, அடுத்து ஜனாதிபதியாக் பதவியேற்பதற்காக அவருக்கு வாழ்த்துக் கூட டிரம்ப் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு