புதிய கட்சி தொடங்க திட்டமிடும் டிரம்ப்!! -ஆதரவாளர்களுடன் இரகசிய ஆலோசனை-

ஆசிரியர் - Editor II
புதிய கட்சி தொடங்க திட்டமிடும் டிரம்ப்!! -ஆதரவாளர்களுடன் இரகசிய ஆலோசனை-

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த டிரம்ப், பதவியை இழந்த நிலையில் புதிய கட்சி தொடங்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேர்தல் தோல்வி மற்றும் பாராளுமன்றத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களை அடுத்து டிரம்புக்கு குடியரசு கட்சியின் பல்வேறு தலைவர்களுடன் சுமுக உறவு இல்லாத சூழல் நிலவுகிறது. 

இந்நிலையில் தனியாகவே தேசபக்தர் என்ற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பிக்க டிரம்ப் யோசித்து வருகிறார் என அவருக்கு நெருங்கிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஆதரவாளர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரங்களுடன் ஆலோசனையை அவர் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு