வெலிகமவில் கார் விபத்து: 2 பலி

ஆசிரியர் - Admin
வெலிகமவில் கார் விபத்து: 2 பலி

வெலிகம – கப்பரத்தோட்டப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது.

வெலிகமவில் அமைந்துள்ள “மெரியட்” ஹோட்டலில் கடமை புரியும் இருவர், மிதிகம பகுதியில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு விட்டு காரில் திரும்பிக் கொண்டிருக்கையில் எதிரே வந்த டிப்பர் வண்டியில் மோதுண்டு இவ்விபத்து நடந்துள்ளது.

இரத்மலானையைச் சேர்ந்த இவர்கள் 29 வயதுடையவர்களென தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் வாகனத்துக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. டிப்பர் சாரதி வெலிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சடலங்கள் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

வெலிகம பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.